Sunday, March 15, 2009

தந்து தொலைத்திருந்தால்...

அழகழகான
கிளைகளை விரித்தபடி
ஆயிரம் பூக்களைச் சுமந்தபடி
பார்வையில் பட்டு ஓடின
பேருந்தின் வேகத்திற்கு
ஈடு கொடுத்து.....


வானத்து மேகங்கள்
வித, விதமாய்
உருக்கொண்டு நகர்ந்தபடி
தக்க பயணங்களை
பதிவு செய்தன!


முன்னிருக்கை குழந்தை
எக்கி எக்கி
தன் பிஞ்சுக் கரங்களால்
என்னை தொடப் பார்த்து
தோல்வியடைந்தது!


பின்னிருக்கை
இளஞ்ஜோடி
காதோரம் கதைபேசி,
கைவிரலில் நடைபயின்று
கிறங்கி குதுகலித்தது!


சவுகரியமாய்
அமர இடம் பிடித்தும்
ரசிக்கத்தக்க நிகழ்வுகளை
ரசிக்க இயலாமல் தடுத்தது
நடுதனர் தர வேண்டிய
சில்லறை பாக்கி...!

No comments:

Post a Comment